×

மாடல் அழகியிடம் போனில் ஆபாச பேச்சு பிரபல நடிகர் மீது போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்:  செல்போனில் ஆபாசமாக பேசியதாக மாடல் அழகி அளித்த புகாரின்பேரில் பிரபல மலையாள நடிகர் வினாயகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் வினாயகன். இவர் 1995ம் ஆண்டு ‘மாந்திரிகம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பல மலையாள படங்களிலும் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உட்பட தமிழ் படங்கிலும் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த ‘தொட்டப்பன்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி ஒருவர், வயநாடு மாவட்டம் பாம்பாடி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

அதில், ‘‘கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் வயநாடு மாவட்டம் கல்பற்றா சென்றிருந்தேன். அப்போது நடிகர் வினாயகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கூறி போனில் அழைத்தார். அப்போது அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த புகாரை பெற்றுக்ெகாண்ட ேபாலீசார், சம்பவம் நடந்த இடம் கல்பற்றா என்பதால் அங்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கல்பற்றா போலீசார் நடிகர் வினாயகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : actor ,porn talk , Model,Aesthetics ,Police,Phone
× RELATED வறுமையில் வாடும் மகாபாரத நடிகர்