×

இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையிலும் மாஜி முதல்வர் சந்திரபாபுவுக்கு விமான நிலையத்தில் கெடுபிடி: சாதாரண பயணிகளைபோல் சோதனை

விஜயவாடா: இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு விஐபி அந்தஸ்து வழங்க மறுக்கப்பட்டதோடு, விமான நிலையத்தில் சாதாரண பயணிகளை போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.   ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, விமானத்தில் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்தார். தற்போது மாநில எதிர்க்கட்சி தலைவராக உள்ள அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு விஐபி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார். ஆனால், பாதுகாப்பு படை வீரர்கள் அவரை விஐபி வாகனத்தில் ஏற அனுமதி மறுத்தனர். மேலும், சாதாரண பயணிகளை போல் வரிசையிலும் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் உடமைகளை சோதனையிட ஒத்துழைக்கும்படியும் அவர்  கேட்டுக் கொள்ளப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு தனது காரில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு  வரிசையில் சென்றார்.

அப்போது, ஸ்கேன் கருவி சோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர் அவரை முழுமையாக தடவி சோதனை செய்தனர். இதன் பிறகே அவரை விமானத்திற்கு ெசல்ல அனுமதித்தனர். அப்போதும், விமானம் நிற்கும் இடம் வரை விஐபி வாகனத்தில் செல்ல அவர் அனுமதி கேட்டார். ஆனால், அதற்கும் பாதுகாப்பு படையினர் அனுமதி மறுத்தனர். இதனால் மற்ற பயணிகளுடன் விமான நிறுவனத்தின் பஸ்சிலேயே அவரும் ஏறி சென்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  விமான நிலையத்தில் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Chidambaram ,Saji ,Airport Airport , Saji's,Chief Minister, Chidambaram , Airport Airport
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...