மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுங்கள்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு மோடி கடிதம்

புதுடெல்லி: மழை நீரை சேமிக்கும்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.  நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை தலைதூக்கியுள்ளது. இதனால், மக்கள் நெடுந்தொலைவு சென்று குடிநீர் எடுத்துவரும் அவல நிலை நிலவுகிறது. இதையடுத்து, மழை நீரை சேமிக்கும்படி நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அப்போது, இயற்கை கொடுத்த மழை நீரை முடிந்த அளவுக்கு சேமிக்க ேதவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஆறுகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே சிறு அணைகள் மற்றும் தடுப்பணைகளை கட்ட வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை பராமரிப்பு ெசய்ய வேண்டும்,  அணைகளை தூர்வார வேண்டும்.

இதன் மூலம், மழை நீரை தேவையான அளவுக்கு சேமிக்க முடியும். இவ்வாறு செய்தால் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க முடியும். கூடுதல் நீரை அணைகளில் சேமிப்பதால் நமது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே, அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் உடனே கூட்டங்களை நடத்தி, மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்த எனது கடிதத்தை மக்களிடம் வாசித்து காண்பிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தை பஞ்சாயத்து தலைவர்கள் தலைமை தாங்கி மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

× RELATED கிணற்றில் மழைநீரை சேகரித்து கிராம...