தமிழக பக்தர்களை தாக்கிய 6 போலீசார் பணியிடமாற்றம்

திருமலை: திருமலையில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சிக்காக வந்த செங்கல்பட்டு பக்தர்களை சோதனை செய்து, அவர்களில் ஒருவரிடம் இருந்த குட்கா பாக்கெட் அதிரடிப்படை வீரர் தூக்கி எறிந்தார். அதை மீண்டும் அந்த பக்தர் எடுக்க முயன்றதால், அவர்களை அதிரடிப்படையினர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக தேவஸ்தான விஜிலன்ஸ் துறையில் பணியாற்றி வந்த 2 பேரை தேவஸ்தான நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது. மேலும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் 4 பேர் அந்த துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Tags : policemen ,Tamil Nadu , 6 policemen,attacked, Tamil Nadu
× RELATED பாதை மாறும் இளைஞர்கள்...கல்லா கட்டும்...