சொல்லிட்டாங்க...

தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. ஐடி கம்பெனிகள் ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்?

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Advertising
Advertising

‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என பாஜ ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர்.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்தி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் வேலை செய்யும் பிறமொழி பேசுவோர் இந்தி கற்றுக்கொள்வது இன்றியமையாதது.

- விசிக தலைவர் திருமாவளவன்

தமிழகத்தில் எந்த பள்ளியிலும் குடிநீர் பற்றாக்குறை இல்லை. குடிநீர் தட்டுப்பாடு என்ற தகவல் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை.

- அமைச்சர் செங்கோட்டையன்

Related Stories: