உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 335 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 335 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. லண்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 334 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் 153, ஸ்மித் 73, மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியின் சார்பில் உடனா, தனஜெயா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனை தொடர்ந்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

Advertising
Advertising

Related Stories: