உபேர் நிறுவனத்தின் குட்டி விமானம் மூலம் அமெரிக்காவில் உணவு சப்ளை செய்ய திட்டம்

சான்டியாகோ: செயலி மூலம் இயங்கும் பிரபல உபேர் ஈட்ஸ் உணவு நிறுவனம் குட்டி விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுட சுட உணவு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில் சோதனை முயற்சியாக தனது திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உபேர் ஈட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி பாய்ஸ் மூலம் சப்ளை செய்து வருகிறது.

இருப்பினும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க இந்த நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி குட்டி விமானம் மூலம் உணவுகளை எடுத்து சென்று குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கும் உணவு நிறுவன ஊழியர்களிடம் வழங்கவும், அவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கவும் உள்ளனர். மேலும் அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில் மெக்டொனல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த சேவையை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: