ஒரே நாளில் 312 அதிகரிப்பு தங்கம் விலை மீண்டும் உச்சம் ஒரு சவரன் 25,288ஐ எட்டியது

சென்னை: ஆபரண தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 312 அதிகரித்து, மீண்டும் 25,000ஐ தாண்டியது. மேலும் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.  கடந்த ஆண்டில் சவரன் 23,000 என்ற அளவிேலயே இருந்த ஒரு சவரன் ஆபரண தங்கம், தீபாவளி நெருங்கும் முன்பு 24,000ஐ தாண்டியது. கடந்த ஜனவரி வரை 24,000க்கு மேல்தான் இருந்தது. ஜனவரி இறுதியில், அதாவது, 28ம் தேதி வர்த்தக முடிவில் சவரன் 25,016க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு மார்ச் மாதம் 2ம் தேதி வரை தங்கம் சவரன் 25,000க்கு மேல் நீடித்தது. அதன் பிறகுதான் குறையத்தொடங்கியது. தங்கம் விலை கடந்த மாதத்தில் பெரும்பாலான நாட்கள் சரிவைேய சந்தித்தது. கடந்த மாதம் 2ம் தேதி சவரனுக்கு 288, 20ம் தேதி 272 சரிந்தது. கடந்த மாதம் 31ம் தேதி 248 உயர்ந்தது. இவையே கடந்த மாதத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள்.

ஆனால் கடந்த 8ம் தேதி முதல் முறையாக ஒரு சவரன் 25 ஆயிரத்தை தாண்டி 25,136 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனாலும், நகை பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 10ம் தேதி சவரனுக்கு 248 குறைந்து 24,888க்கும், அடுத்த நாள் 112 குறைந்து 24,776க்கும் விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 12ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்றைய தினம் சவரனுக்கு 176, அடுத்த நாளில் 24 என உயர்ந்து 25,000ஐ நெருங்கியது. 2 நாள் சரிவுக்கு பிறகு மீண்டும் விலை உயரும் என நகை வியாபாரிகள் எதிர்பார்த்தது போலவே, தங்கம் விலை நேற்று காலை முந்தைய நாளை விட சவரனுக்கு 184 உயர்ந்து 25,160க்கும், மாலையில் 312 உயர்ந்து 25,288க்கும் விற்பனையானது.

 இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ‘‘சர்வதேச சந்தை நிலவரம்தான் உள்ளூர் சந்தையில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் 30 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இது தவிர, ரூபாய் மதிப்பு சரிவும் காரணம். இந்த நிலைமை நீடிக்கும். வரும் திங்கட்கிழமை தங்கம் விலை சற்று குறையலாம். ஆனால், சர்வதேச சந்தை நிலவரப்படி அதன்பிறகு மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன என்றார்.

Related Stories: