சீனாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 61 பேர் பலி

சீனா: சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டுள்ளனர்.

மேலும் சுமார் 37 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளப்பாதிப்பினால் மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். குவாங்டன் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த 4,300க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். 

Related Stories:

>