அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை : சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், தேர்தல் பணியாற்றிய அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு வழிமொழிய வாய்ப்பளித்த பாஜக கட்சிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி வெற்றியைப் பெற்றிட தீர்மானம்,  ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: