அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசவில்லை: ராஜேந்திர பாலாஜி

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசவில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தற்போது உள்ள தலைமை அடிப்படையில் செயல்பட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது எனவும், ராஜன் செல்லப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார் எனவும் கூறினார். மேலும் கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை, ஒற்றைத் தலைமை குறித்து ஏதும் பேசவில்லை எனவும் தெரிவித்தார். கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் எனவும் கூறினார்.


× RELATED டிவி நிரூபரின் கேமராவை உடைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி