பெங்களூருவில் 2000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் தற்கொலை செய்ய போவதாக வீடியோ வெளியீடு

பெங்களூரு: பெங்களூருவில் 2000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமத் கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பி தராததால் தாம் தற்கொலை செய்ய போவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தற்கொலை செய்ய போவதாக வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவியது. நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் ஐ.எம்.ஏ. என்ற இஸ்லாமிய வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிறுவனம் 2000 கோடி ரூபாய் நிதியை திரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய நேரத்தில் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தராததால் கடந்த சில மாதங்களாக கடும் சிக்கல் நீடித்து வந்துள்ளது.

மேலும் தங்கள் பணத்தை மீட்டு தர கோரி 4 ஆயிரம் பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இதன் உரிமையாளரான முகமத் மன்சூர்கான் வெளியிட்ட வீடியோ பதிவில் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டதால் தாம் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்துள்ளார். சிவாஜி நகர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன்பேக் இந்த நிதி நிறுவனத்திடமிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை பெற்று திருப்பி கொடுக்கவில்லை என்றும் பணத்தை திருப்பி கேட்ட தம்மை கொலை செய்ய போவதாக ரவுடிகளை அனுப்பி மிரட்டியதாகவும் மன்சூர்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: