×

இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பு; கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை: கோவை மாவட்டத்தில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், அன்புநகர், உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பு இருப்பதை அடுத்து அசாருதீன், சதாம், அக்ரம் ஜிந்தா, அபுபக்கர் சித்திக் உட்பட 7 பேரின் வீடுகளில் கொச்சி மற்றும் கோவையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 36 வெளிநாட்டினர் உட்பட 253 பேர் பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பினரை ஐ.எஸ் பயன்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்தது.

இலங்கை, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் இஸ்லாம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என இளைஞர்களுக்கு தீவிரவாதி ஹாசிம் வேண்டுகோள் விடுப்பதும் வீடியோவில் இருந்தது. இது தொடர்பான விசாரணையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இ-மெயில், சமூக இணையதள கணக்குகளை ஆராய்ந்தபோதுதான், இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடந்த ஐஎஸ்ஐஸ் திட்டமிட்டிருப்பதை என்ஐஏ கண்டுபிடித்து இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தான் கோவை மாவட்டத்தில் உக்கடம் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : blast ,Sri Lankan ,NIA ,Coimbatore , Sri Lanka, blast, Coimbatore, NIA Officials,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!