வந்தே பாரத் எக்ஸ்பிரசில் பயணம் செய்த மத்திய அமைச்சருக்கு கெட்டுப்போன உணவு

புதுடெல்லி: ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பயணம் செய்த மத்திய இணை அமைச்சர் உட்பட பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு வழங்கியது தொடர்பாக 5 நட்சத்திர ஓட்டலில் ரயில்வே விசாரணை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசிக்கு அதிவேக ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரயிலில் கடந்த வாரம் பயணம் செய்த பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. பயணம் செய்தவர்களில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியும் அடங்குவார்.

Advertising
Advertising

இந்நிலையில், ரயிலில் கெட்டுப்போன உணவு விநியோகம் செய்தது தொடர்பாக ரயிலில் பயணம் செய்த ராணுவ அதிகாரி ஒருவர், கடந்த 9ம் தேதி ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, பயணிகளுக்கு உணவு வழங்கும் பணியை மேற்ெகாண்டு வரும் 5 நட்சத்திர ஓட்டலில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கான்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்தான் கெட்டுப்போன உணவை வழங்கியது தெரிய வந்துள்ளது. அதிக வெயில் காரணமாக உணவு கெட்டுவிட்டதாக நட்சத்திர ஓட்டல் விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: