கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கியது

புதுடெல்லி:  கைலாஷ் மானசரோவர் யாத்திரையை  வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: கைலாஷ்-மானசரோவர் யாத்திரை, மக்களிடையே நடக்கும் அன்பு பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்தியா -  சீனா இடையிலான நட்பையும், புரிதலையும் வலுப்படுத்துகிறது. இந்தாண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்காக வெளியுறவு  அமைச்சகத்துக்கு 2,996 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவர்களில் 2,256 பேர் ஆண்கள், 740 பேர் பெண்கள். மூத்த குடிமக்கள் 624 பேர் விண்ணப்பித்து உள்ளனர். உத்தரகாண்டின் லிபுலேக் வழியாக தலா 60 பக்தர்கள் வீதம், 18 குழுவினர் செல்ல உள்ளனர். சிக்கிமின் நதுலா வழியாக தலா 50 பக்தர்களை கொண்ட 10 குழுக்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றன. பக்தர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை  பின்பற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து, புனித யாத்திரை செல்லும் முதல் குழுவை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Related Stories: