×

2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார் : யுவராஜ் மனைவி உருக்கம்

மும்பை : 2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து யுவராஜ் சிங் அழுததாக அவரது மனைவி உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் நேற்று அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் கலங்கி போயுள்ளனர். இந்திய அணி கிரிக்கெட் வீரர்களில் சச்சின், கங்குலி, திராவிட், தோனி ஆகியோருக்கு சற்றும் சளைக்காத வகையில் யுவராஜ் சிங்கிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

கடந்த 2000வது ஆண்டு கென்யா அணிக்கு எதிராக நைரோபியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமான யுவராஜ் (37 வயது), இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன் (அதிகம் 169, சராசரி 33.92, சதம் 3, அரை சதம் 11) மற்றும் 9 விக்கெட் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்த அவர் 304 போட்டிகளில் விளையாடி 8071 ரன் (அதிகம் 150, சராசரி 36.55, சதம் 14, அரை சதம் 52) மற்றும் 111 விக்கெட் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 58 சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கியுள்ள யுவராஜ், அவற்றில் 1177 ரன் (அதிகம் 77*, சராசரி 28.02, அரை சதம் 8), 28 விக்கெட் எடுத்துள்ளார். இடது கை வீரரான இவர் ஐபிஎல் டி20, ரஞ்சி கோப்பை உட்பட பல்வேறு தொடர்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் போட்டிகளில் இருந்து விலகினார். பின்னர் 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள யுவராஜ் சிங் மனைவி ஹஷெல் கீச், ஒரு மனைவியாக அவரிடம் கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன். யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ம் யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பினர். அதைக்கண்ட யுவராஜ் அழுதார். அவரது உணர்ச்சிகளை அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்; என்று தெரிவித்துள்ளார்.

Tags : Yuvraj , Cricket, yuvraj, wife, squad, indian team
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி