ஜூஸ்களில் கலந்து குடிக்கும் தரமற்ற ஐஸ் கட்டிகளால் ஆபத்து

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கத்திரி வெயிலின் தாக்கம் மனிதர்களை சுட்டெரித்தது. மக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர், ஜூஸ் கடைகளில் கூட்டமாக நிற்பதை அடிக்கடி காண முடிகிறது. இது போன்ற ஜூஸ் கடைகளில் ஐஸ் கட்டிகளை நாம் குடிக்கும் ஜூஸ்களில் குளிர்ச்சிக்காக போட்டு கொடுப்பார்கள்.

ஐஸ் கட்டிகள் 50 கிலோ கட்டிகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதில் உணவு பயன் பாட்டுக்கான (மனிதர்கள் உட்கொள்வது) கட்டிகள் கட்டி ஒன்று ரூ.180 வரையும், உணவு பயன்பாடற்ற ஐஸ் கட்டிகள் ஒரு கட்டி ரூ.150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஏராளமான ஐஸ் கம்பெனிகள் இயங்கி வருகிறது. இவர்கள் தயாரிக்கும் ஐஸ் கட்டிகள் உணவு பயன்பாட்டுக்கு தரமானதுதானா என்ற சந்தேகம் எழுந் துள்ளது. இப்படி இயங்கும் கம்பெனிகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதார மானதா?, குடிக்க உகந்த நீரா?, அதன் உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது?, சுகாதார முறையில் ஐஸ் கட்டிகளாக மாற்றப்படுகிறதா என்று இதுவரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தெரியவில்லை. அந்த கடைகளுக்கு அதிகாரிகள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஐஸ்கட்டிகளை உணவு பயன்பாடு மற்றும் உணவு பயன்பாடற்ற பயனுக்காக என்ற இரு வகைகளில் தயாரிக்கலாம். இதில் உணவு பயன்பாடற்ற அதாவது தொழிற்சாலைகளுக்கு ஐஸ் கட்டிகளை தயாரிக்கும்போது அது சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. ஆனால், உணவாக பயன்படுத்தும் ஐஸ்கட்டிகளை தூய நீரில் தயாரிக்க வேண் டும். இதனை அதிகாரிகள் தங்களின் ஆய்வுகள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

உணவு பயன்பாடு, உணவு பயன்பாடு அல்லாத ஐஸ் கட்டிகளை சாதாரணமாக பார்க்கும் போது இதை கண்டுபிடிக்க முடியாது. மத்திய அரசு உணவு பயன்பாடற்ற ஐஸ் கட்டிகளை தயாரிக்க இரண்டு விதமான வண்ணங்களை கலந்து ஐஸ்கட்டி தயாரி த்து ேவறுபடுத்த வேண்டும் என கடந்த ஆண்டு மே 4ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப் பாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் டெல்டா பகுதிகளில் இது போன்ற விதிமுறைகளை இதுவரை கடைபிடிக்க வில்லை. மேலும் ஐஸ் கட்டிகளை தயாரிக்கப்படும் தண்ணீர் சுகாதாரமானதா என்றும், ஐஸ் கட்டி தயாரிக்கும் கம்பெனிகள் சுகாதாரமான முறையில் இயங்குகிறதா என்பதும் கேள்வி க்குறியாகத்தான் உள்ளது. இதனால் நீரினால் ஏற்படும் நோய்தொற்று, உடல் உபாதைகள் ஏற்படும் ஒரு அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் உள்ள ஐஸ் கம்பெனிகளில் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகள் உணவு பயன்பாட்டுக்கு உகந்ததா என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்றனர்.

Tags : Juice, ice, danger
× RELATED சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்