பூனை ‘ஸ்வீட்’ சாப்பிடுமா?

பூனை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஊன் உண்ணி. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்ணும். பொதுவாக 2.5 கிலோ முதல் 7 கிலோ வரை இருக்கும். 12 முதல் 16 மணி நேரம் உறங்கும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அதன் தலைநுழையும் அளவிற்கு இடம் இருந்தால் கூட உடல்முழுவதையும் நுழைத்து வெளியேறும் ஆற்றல் அதற்கு கிடைக்கிறது. முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை வெளிப்படாமல் இருக்க மெத்தைபோன்ற பாதஅமைப்பு உண்டு. நுகரும் சக்தி மனிதனை விட 14 மடங்கு அதிகமாகும். பூனைகளின் நாக்கில் இனிப்புச்சுவையை அறியும் மொட்டுக்கள் இல்லை. எனவே அவை இனிப்பு சாப்பிட்டாலும், அதன் சுவையை உணர முடியாது.

Advertising
Advertising

இதனால் பூனைகளால் இனிப்புச்சுவையை அறியமுடியாது. மரபணுமாற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன என்று கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற சுவைகளை இவற்றால் நன்கு உணரமுடியும். கர்ப்பகாலம் 2 மாதமாகும். ஒரு பூனை வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும். கூரிய இரவுப்பார்வை இதற்குண்டு. மனிதனுக்கு தேவைப்படும் ஒளியில் 6ல் ஒருபங்கு ஒளிகூட இதற்கு போதுமானது. பூனைகள் தனிமை விரும்பிகளாகும். நாய்கள், சிங்கங்கள் போல இல்லாமல் தனித்தே இருக்கும் சுபாவம் கொண்டது. சிறியவகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவை. நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிட்டால் அதன் பார்வைத்திறன் குறைபடும். வெளிநாடுகளில் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கும் போக்கு அதிகம் உள்ளது.

Related Stories: