ரத்தத்தின் வேலை தெரியுமா?

ரத்தம் உணவு, தண்ணீர், பிராணவாயுவை திசுக்களுக்கு எடுத்துச்செல்கிறது. கழிவுப் பொருட்களை கழிவு நீக்கும் உறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது. நோய் கிருமிகளை எதிர்க்கிறது. சுரப்பிகள் சுரப்பு மற்றும் என்சைம்களை விநியோகிக்கிறது. உடல் முழுமைக்கும் ஒரேவிதமான வெப்பத்தை தருகிறது. எங்காவது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உறைவதின் மூலம் ரத்தஇழப்பை தடுக்கும். இவ்வாறு ரத்தம் பல்வேறு செயல்பாடுகளை செய்து உடலைக் காத்து வருகிறது.

Advertising
Advertising

ஒருவர் நோயுற்றோ,  விபத்திற்கு உள்ளாகியோ மிகுந்த ரத்தச்சேதம் ஏற்பட்டுவிட்ட நிலையிலே மாற்று ரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களிலே எல்லோருடைய ரத்தத்தையும் செலுத்திவிட முடியாது. சம்பந்தப்பட்டவரின் ரத்தம் எந்த வகை என்பதை அறிந்தே அவருக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் உள்ள அக்குளுடினோஜன் என்னும் பொருளைப் பொறுத்து ரத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. ‘ஏ’ பிரிவு ரத்த நோயாளிக்கு ‘ஏ’ மற்றும் ‘ஓ’ பிரிவு ரத்த வகைகளை செலுத்தலாம். ‘பி’ பிரிவு ரத்தவகைக்கு ‘பி’ மற்றும் ‘ஓ’ பிரிவு ரத்தம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ‘ஏபி’ பிரிவிற்கு எல்லா வகை ரத்தப்பிரிவையும் செலுத்தலாம். ‘ஓ’ பிரிவு ரத்த பிரிவினருக்கு ‘ஓ’ வகை ரத்தம் மட்டுமே சேரும். இதனால் ‘ஓ’ பிரிவு ரத்தம் உள்ளவர்களை அனைவருக்கும் கொடுக்கக் கூடிய ரத்தவகை உடையவர்கள் என்றும்(யுனிவர்சல் டோனர்) என்றும், ‘ஏபி’ பிரிவினர்க்கு அனைவரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளக்கூடிய ரத்தவகை உடையவர்கள் என்றும் கூறுவர்.

Related Stories: