கடும் வறட்சி... பூச்சி நோய் தாக்குதல்... அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்

* காப்பீடு செய்ய டெல்டா விவசாயிகளுக்கு அைழப்பு

Advertising
Advertising

டெல்டா மாவட்டம் பாசன பகுதிகளில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது தென்னை மரங்களை வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை ஆகியவற்றிலிருந்து பாதுகாத் திட காப்பீடு செய்து கொள்ளலாம். அதன்படி, இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப் பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும்.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளின் முடிவே இறுதியானது. ஆனால் திருட்டு, சண்டை சச்சரவு, போர், வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் விடப்படும் தோட்டங்கள், மனிதன் மற்றும் மிருகங்களால் ஏற்படுத்தப்படும் அழிவு, நோய்வாய்ப்பட்ட கன்றுகள், மரங்கள் சரியாக பரா மரிக் கப்படாமல் இருத்தல் போன்ற இழப்பீடுகளுக்கு தொகை வழங்கப்பட மாட்டாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராக வோ, ஊடு பயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறை ந்தபட்சம் பலன்தரக்கூடிய 5மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.

ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டுரகங்கள் 4ம் ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள் 7ம் ஆண்டு முதல் 60ம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஒரு ஹெக்டே ருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும்.

தென்னை காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீடு செய்த தென்னை மரங்களை வண்ணம் பூசி அதற்கு வரிசை எண்களும் குறிப்பிட வேண்டும். மேலும் விவசா யிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுய உறுதி முன்மொழிவு அளிக்க வேண்டும். காப்பீடு செய்துள்ள காலத்தில் காப்பீடு நிறுவனம் தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யவும், விவசாயிகள் தவறான அல்லது உள்நோக்கம் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளித்திருந்தால் காப்பீடு நிராகரிக் கப்படவும் உரிமை உண்டு.

தென்னை விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து பிரிமிய தொகையை வரை வோலையாக ஏஐசி ஆப் இந்தியா லிட் என்ற பெயருக்கு ஆக்சிஸ் வங்கியில் 006010200018027 என்ற எண்ணுக்கு சென்னையில் மாற்றகூடிய வகையில் எடுத்து ஏதேனும் ஒரு தென்னை சாகுபடி ஆதாரத்தை ( சிட்டா மற்றும் அடங்கல்) இணை த்து வேளாண்மைத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாண்டில் எந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகின்றதோ அதற்கு அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து ஒரு வருட காலத்திற்கு பாலிசி வழங்கப்படும். பாலிசி தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் ஏற்படும் இழப்பிற்கு இழப்பீடு தொகை வழங் கப்பட மாட்டாது.

பிரிமியத்தொகையில் 50 சதவிகிதம் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவிகிதம் மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. மீதி 25சதவிகிதம் விவசாயிகள் செலுத்தினால் போதும். 4 வயது முதல் 15 வயது வரை உள்ள தென்னை மரங் களு க்கு காப்பீட்டுத்தொகை ரூ.900த்திற்கு பிரிமியத்தொகை ஓராண்டுக்கு ரூ.9ஆகும். இதில் விவசாயிகளின் பங்கு என்பது ரூ.2.25 ஆகும். இதேபோல் 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீட்டுத்தொகை ரூ.ஆயிரத்து 750க்கு பிரிமியத் தொகை ரூ.14. இதில் விவசாயிகளின் பங்கு ரூ.3.50 ஆகும். மேலும் இழப்பீட்டுத்தொகை கணக்கீடு என்பது 3 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளது. அதில் 10 முதல் 30 மரங்கள் வரையில் ஒரு பிரிவாகவும், 31 முதல் 100 மரங்கள் வரையில் ஒரு பிரிவாகவும், 100க்கும் அதிகமான மரங்கள் ஒரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யப்பட்ட தென்னை மரங்கள் இழப்பு ஏற்பட்டால் காப்பீடு செய்த விவசாயி 15 தினங்களுக்குள் காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். இழப்பு மதிப்பீடு சான்றிதழ் காப்பீடு நிறுவனத்தால் அந்தந்த மாவட்டங்களில் அங்கீகரிக் கப்பட்ட தென்னை வளர்ச்சி வாரியம் அல்லது வேளாண்மைத்துறை அல்லது தோட்டக் கலைத்துறையிடமிருந்து பெற்று 15 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இழப்பீட்டுத்தொகை ஆய்வு முடித்து நிறுவனத்திடமிருந்து விரைவாக பெற்று வழங் கப்படும் என்பதால் தென்னை விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: