இயற்கையிலேயே மனிதன் சைவமா, அசைவமா?

சைவ உணவை வலியுறுத்தும் அமைப்புகள் மனித உடற்கூறுகள் குறித்து பல்வேறு மேற்கோள்களை நம் முன் வைக்கின்றன. உதாரணமாக மனிதனின் உடலமைப்பை அசைவ உண்ணும் புலி, சிங்கம், பூனை, நாய் போன்ற விலங்குகளின் உடல் அமைப்புகளோடும், தாவர உணவு உண்ணும் பசு, யானை, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் உடலமைப்போடும் ஒப்பிட்டு பார்க்கையில் மனிதனின் உடலமைப்பு தாவர உண்ணும் விலங்குகளின் உடலமைப்போடு மட்டுமே ஒத்து போகிறது.

Advertising
Advertising

அசைவ உணவுஉண்ணும் விலங்குகளுக்கு தட்டையான கடைவாய் பற்கள் இல்லை. ஆனால் தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தாவர உணவை அரைத்து உண்ண வசதியாக தட்டையான கடைவாய் பற்கள் உண்டு. அசைவ உணவை உண்ணும் விலங்குகளுக்கு இரையை பிடிக்க, கிழிக்க கூரியநகங்களும், வாயில் கோரைப்பற்களும் உள்ளன. ஆனால் மனிதனுக்கு இந்த உடலமைப்பு இல்லை. செயற்கையாக அரிவாள், கத்தியுடன் விலங்குகளை கொல்கிறான்.

அசைவ உணவு உண்ணும் விலங்குகள் தங்களுடைய நீண்ட நாக்குகளை நீட்டி நக்கி தண்ணீர் குடிக்கின்றன. ஆனால் தாவர உணவை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும் உதடுகளால் உறிஞ்சு குடிக்கின்றனர். அசைவ உணவை உண்ணும் விலங்குகள் உடலை குளிரச் செய்ய நாக்கை தொங்கவிட்டவாறு வேகமாக சுவாசிக்கின்றன. தாவரஉணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலை குளிரச்செய்ய தோலில் உள்ள கோடிக்கணக்கான வியர்வை துவாரங்கள் வழியே வியர்வையை வெளியேற்றுகின்றன.

குடல்அமைப்பு, சிறுநீரகம், கல்லீரல் அமைந்த விதம் அனைத்து தாவரஉணவை உண்ணும் வகையில் மனிதர்களுக்கு உள்ளது. எனவே மனிதர்கள் தாவரபட்சினியே. உடலுக்கு ஒவ்வாத அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அசைவ உணவை கட்டுப்படுத்த வேண்டும் என்று சைவவிரும்பிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Related Stories: