ஐரோப்பிய டிசைனில் சுஸுகி ஜிக்ஸெர் 250

சுஸுகி மோட்டார்சைக்கிள் ஜிக்ஸெர் 150 எஸ்எப் மற்றும் ஜிக்ஸெர் 250 எஸ்எப் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சுஸுகி நிறுவனம், ஜிக்ஸெர் 250 எஸ்எப் மாடலை ரூ. 1.70 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மோட்டார்சைக்கிளில், அனைத்து பாகங்களும் புதுவிதான டிசைன்களை பெற்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. அந்தவகையில், சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் மற்றும் ஹயபூசா ஆகிய பைக்குகளின் ஸ்டைல் தாத்பரியங்கள் சிலவற்றை இந்த புதியு சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எப் பைக் பெற்றுள்ளது.

பைக்கின் முகப்பு பகுதியில் ட்யூவல் எக்சாஸ்ட் மப்ளர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில், அந்த நிறுவனம் அண்மையில் உருவாக்கிய அதீத திறனை வெளிப்படுத்தக்கூடிய இன்ஜினை பொருத்தியுள்ளது. இது, 249 சிசி திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த இன்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பை கொண்டதாகும். 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரகத்திலான இன்ஜின், ஒரே சமயத்தில் பெர்பார்மென்ஸ் மற்றும் எபிசியன்ஸியை பேலன்ஸ் செய்து இயங்கும் தன்மையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38.5 கிமீ மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.

சொகுசான பயண அனுபவத்திற்காக, பைக்கின் முன்பக்கத்தில் ஸ்டாண்டர்டு டெலிஸ்கோபிக் போர்க் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பின்பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் டைப் மோனோசாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிளுக்கு 17-இன்ச் அளவிலான டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன், டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் கூடுதல் அழகிற்காக சிறப்பான கிராபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதியாக புல்லி டிஜிட்டலைஸ்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஈசி ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக், ஸ்டைல் மற்றும் சக்தியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: