மாமூலுக்கு இடையூறு மாவட்ட செயலாளரை செமையாக கவனித்த இன்ஸ்பெக்டர்

மலைக்கோட்டை மாநகரில் மையப்பகுதியில் காய்கறிக்கடைக்கு பெயர் போன பகுதியில் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசூல் மழையில் குளித்து வருகிறார். டாஸ்மாக் பார் மாமூல், புகாரின் பேரில் விசாரணை நடத்தி கட்டப்பஞ்சாயத்து பேசி இருதரப்பினரிடமும் வசூல் செய்து கல்லா கட்டி வருகிறார். இவருக்கு டாஸ்மாக் பார்களில் வரும் மாமூல் அதிகம். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டியபின் அதே கடையின் பார்களில் மது விற்பனை கனஜோராக நடக்கிறது. மேலும் இரவு நேர காய்கறிக்கடைகள் இருப்பதால் அங்கு பணியில் உள்ள கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என ஏராளமானோரிடமிருந்து கூடுதலாக கிடைக்கும் வசூலில் இன்ஸ்பெக்டரும், உரிமையாளர்களும் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடைவீதியில் நடுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் நண்பருடன் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் போதையில் நண்பருடன் சத்தமாக பேசி கொண்டிருந்தார். இதனால் கடையில் தகராறு செய்ததாக வந்த புகாரின் பேரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மாவட்ட செயலாளர் மற்றும் நண்பரை காவல் நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் வைத்து நன்றாக கவனித்தார். நான் தகராறில் ஈடுபடவில்லை, பாரில் அமர்ந்து உரக்க பேசியது குற்றமா, இரவில் நடக்கும் மது விற்பனையை தடுக்க முடியவில்லை, அவர்கள் கொடுக்கும் பணத்திற்காக விசாரணை நடத்தாமல் ஒருதலைபட்சமாக இன்ஸ்பெக்டர் நடந்த கொண்டார். அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தாலே போதும் என்ன நடந்தது என்று தெரியும் என மாவட்ட செயலாளர் கொதித்து எழுந்து உயரதிகாரிடம் புகார் அளித்தார். ஆனாலும் இன்ஸ்பெக்டர் மீது உயரதிகாரிகளே கடுப்புடன் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்பது தான் உண்மை.

Related Stories: