‘மிகப்பெரிய வெற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: ‘பாஜ கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும், பாஜ கட்சி 18 இடங்களைப் பெற்றது. இதுெதாடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘முதல்வர் பதவியில் இருக்க விரும்பவில்லை என்று கட்சி மேலிடத்தில் கூறினேன். கட்சி  மேலிடத்தில் கடந்த ஆறு மாதங்களாக என்னால் பணிபுரிய முடியவில்லை.  அதிகாரமற்ற முதலமைச்சராக இருக்க முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும்  முடியவில்லை. நான் முதலமைச்சராக தொடர விரும்பவில்லை’’ என்றார்.

தொடர்ந்து, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘பாஜவின் ஓட்டுகள் இடது சாரிகளின் ஓட்டுகள். நாங்கள் தொடர்ந்து மக்களிடம் பணிபுரிந்து வாக்கு சதவீதத்தை அதிகரிப்போம். தேசிய அளவில் பாஜ 303 இடங்களைப் பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 352 இடங்களைப் பெற்றது. ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜ எப்படி வெற்றி பெற்றது. மக்கள் பேச அஞ்சுகிறார்கள். ஆனால் நான் பயப்படமாட்டேன். மிகப் பெரும் வெற்றி சந்தேகத்தைக் கொடுக்கிறது. எதிர்கட்சிகளை பல மாநிலங்களில் இந்த தேர்தல் ஒட்டுமொத்தமாக விரட்டியுள்ளது’’ என்றார்.


Tags : Mamata Banerjee ,West Bengal , Doubt, West Bengal CM, Mamata Banerjee
× RELATED பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள...