×

ஏன் செல்போன் வாங்கல?...காதலன் கன்னத்தில் 52 முறை அறைந்த காதலி

பீய்ஜிங்: செல்போன் வாங்கித்தராத காரணத்தால், காதலி ஒருவர் காதலனின் கன்னத்தில் 52 முறை அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை செர்ந்த இருவர், பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலன் மீது அதீத அன்பு வைத்திருந்த காதலி, காதலனின் பணத்தேவைக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அவருக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில், சீன காதலர் தினத்திற்கு பரிசாக தனக்கு செல்போன் வாங்கித்தரும்படி காதலனிடம் காதலி கேட்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாத காதலன், காதலர் தினத்தன்று அவரது காதலியை பார்க்க சென்றபோது செல்போன் வாங்காமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலி, காதலனின் கன்னத்தில் 52 முறை அறைந்துள்ளார். காதலியின் தண்டனையை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் காதலன் ஏற்றுக்கொண்டுள்ளார். காதலியின் இந்த செயல், அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் காதலி, காதலனின் கன்னத்தில் 52 முறை
அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags : China, lover ginger, girlfriend, social website, viral
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...