×

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை

காரியாபட்டி: காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் உள்ள ரேஷன் கடை இடிந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் பொருள் வாங்க வரும் பொதுமக்கள் புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் ரேஷன் கடைக்கு 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. பொருட்கள் வாங்க எப்போதும்கூட்டமாகவே இருக்கும் இந்த ரேஷன் கடையின் கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுசுவர்கள் இடிந்து சிமின்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அவ்வப்போது பொதுமக்கள் மேல் சிமின்ட் காரைகள் விழுகிறது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் மழை காலங்களில் இப்படி இருந்தால் அரிசி, சீனி போன்றவை கசியும் மழை நீரால் வீணாகிவிடும் சூழ்நிலை உள்ளது. மேலும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றாவாறு கடை பெரிதாகவும் வேண்டும். பொருள்களும் தேவைப்படும் அளிவிற்கு இருப்பு வைக்கமுடியவில்லை. எனவே பொது மக்களை பாதுகாப்பாக நின்று பொருட்களை வாங்கிச் செல்ல விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ration shop ,ruins ,Kariapatti ,Kalkurichi , Kariapatti, ration shop
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா