×

ஈரானுடன் பேச்சு நடத்துவதற்கான ஜப்பானின் முயற்சிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு

ஈரான்: ஈரானுடன் பேச்சு நடத்துவதற்கான ஜப்பானின் முயற்சிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானுடனான தன்னுடைய நல்லுறவுகளை பயன்படுத்தி அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யும் ஜப்பானின் முயற்சிகளை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார். 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப், ஈரானுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்வதற்கு ஈரான் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் ராணுவ ரீதியான மோதல் ஏற்படுமோ என்ற அச்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். வடகொரியா தொடர்பான அணுஆயுத பதற்றம் குறித்தும் பேசிய டிரம்ப், இந்த முரண்பாட்டுக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, வரி விதிப்புகள், வர்த்தக சமநிலை தொடர்பாக அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை எனில், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி மீதும் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

Tags : Trump ,US ,Japan ,Iran , US President,Trump supports ,Japan's efforts negotiate, Iran
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...