பெரம்பலூர் அருகே இடிந்து விழும் அபாயநிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தில் கான் கிரீட் கம்பிகள் தெரிய, இப்ப விழுமோ, எப்ப விழுமோ என உயிர்பலி வாங்கக் காத்திருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை போர்க்கால அடிப்படையில் அகற்றி தடையற்ற குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாக த்திற்கு கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடு த்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மா பாளையம் கிராமத்தில் மேற்கு பெரியபாளையம், கிழ க்குப் பெரியம்மா பாளையம், வெங்க னூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. தமிழ கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மழையின்மையால் ஏற்பட்டுள்ள கடுமை யான வறட்சி காரணமாக நிலத்தடி நீர்ம ட்டம் குறைந்து அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதற்கு பெரியம்மாபா ளையம் கிராமம் மட்டும் விதிவிலக்கல்ல.

பெரியம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து குடிநீர்க் கிணறுகளும் தண்ணீர் வற்றிப்போய் வரண்டுதான் கிடக்கிறது. இதனால் ஒருவாரத்திற்கு தண்ணீர் சிறிது சிறிதாக ஊறி மின்மோ ட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதற்கு வசதியாக இருந்தால் மட்டுமே தண்ணீ ரை வெளியே எடுத்து பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டிய பரிதாபமான சூழலே உள்ளது. அதிலும் கிழக்கு பெரியம்மா பாளையம் கிராமத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிதிலம டைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு எலும்புக் கூடாகக் காட்சி தருகிறது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இப்போ தைய வறண்ட சூழலில் முழுமையாக தண்ணீரை மேலேற்றி நிரப்பி வெளியே ற்றும் அளவுக்கு தண்ணீர் வசதி இக்கி ராமத்தில் இல்லை. இதனால் அருகில் உள்ள கிணற்றிலிருந்து ஊறுகின்ற உப்புத் தண்ணீர் வாரத்திற்கு ஒரு முறை மின் மோட்டார் மூலம் வெளியே கொ ண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின் னர் பொதுமக்களுக்கு வினியோ கிக்கப் படுவதால், வாரக் கணக்கில் காத்திருந்து குடிநீரை மட்டுமே பெற வேண்டிய நிலை உள்ளது.

இன்னும் சில தினங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்ப டும் சூழலில், குடிக்க மட்டும் நீர் கிடை த்தால் குளிப்பதற்கு தண்ணீர் இன்றி பெரிதும் திண்டாட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் உயிர்பலி வா ங்கக் காத்திருக்கும் அபாயகரமான சூழ லில் அந்தரத்தில் நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாடின்றி முடக்கி வைக்கவும், அதற்கு மாற்று வழி ஒன்றினை போர்க்கால அடிப்படையில் விரைந்து செய்து கொடுக்கவும், கூடுத லான தண்ணீர் வசதியை பெற்றுத்தர வும் அப்பகுதி கிராமப் பொதுமக்கள் வேப்பந்தட்டை ஒன்றிய நிர்வாகத்தி ற்கும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தி ற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: