ஆடு விற்பனை ஜோர்... 2 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி: கொங்கணாபுரம் சனி சந்தையில், ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. சந்தையில் மொத்தம் 2 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரத்தில், சனி சந்தை நேற்றுமுன்தினம் கூடியது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 5200 ஆடுகள், 500 பந்தய சேவல்கள், 1500 கோழிகள், 92 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு 4,400 முதல் 5,500 வரையிலும், 20 கிலோ எடையுள்ள ஆடு 8,500 முதல் 11,000 வரையிலும், வளர்ப்பு குட்டி ஆடு 900 முதல் 1200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பந்தய சேவல்கள், அதன் திறன் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு 800 முதல் 3200 வரையிலும், மற்ற கோழி வகைகள் 100 முதல் 1500 வரையிலும் விலை போனது.

அதேபோல், தக்காளி 20 கிலோ பெட்டி 600 முதல் 1000, சின்னவெங்காயம் 30 முதல் 35, பெரியவெங்காயம் 10 முதல் 18, பீன்ஸ் 50 முதல் 56, கேரட் 30 முதல் 35, முட்டைகோஸ் 15, முள்ளங்கி 15, உருளைகிழங்கு 18 முதல் 22க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலை முதலே சந்தைக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. நேற்று கூடிய சந்தையில் மொத்த வர்த்தகம் 2 கோடியை தாண்டியது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: