×

குளித்தலை தென்கரை வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடு

குளித்தலை: கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையிலிருந்து தென்கரை வாய்க்கால் சித்தலவாய், லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், வதியம், குளித்தலை, தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர் குமாரமங்கலம் வழியாக பெட்டவாய்த்தலை சென்றடைகிறது. இந்த வாய்க்காலில் குளித்தலை நகர எல்லையான எல்லரசு பாலத்திலிருந்து இருபுறமும் தென்கரை வாய்க்கால் பகுதியில் குடியிருப்பு அதிகமானதால் தினந்தோறும் வீடுகளில் வரும் குப்பைகளை குடியிருப்பு வாசிகள் வாய்க்காலில் கொட்டிவிடுகின்றனர். அதேபோல் நகர எல்லைக்குள் இருக்கும் உணவகங்கள், மருத்துவமனை மற்றும் இறைச்சிக் கடைகளிலிருந்து வரும் கழிவுகளை இந்த தென்கரை வாய்க்காலில் கொட்டி வருகின்றர். ஒரு சில குடியிருப்பு பகுதியில் நேரடியாக குழாய் மூலம் கழிவு நீரை கொண்டு செல்கின்றனர். மேலும் காவிரி ஆற்றிற்கு செல்ல முடியாதவர்கள் இந்த வாய்க்காலில் குளித்து செல்கின்றனர். இதனால் வாய்க்கால் தண்ணீர் மாசுபட்ட நிலையில் இருப்பதாலும் குப்பை கூளங்கள் தண்ணீரில் தேங்கி இருப்பதாலும் ஆங்காங்கே கொசு உற்பத்தி ஏற்பட்டு பொதுமக்களுக்கு தோல் சம்பந்தபட்ட வியாதிகள் உண்டாகக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் குளித்தலை எல்லரசு பாலத்திலிருந்து பெரியபாலம் வரை தென்கரை வாய்க்காலில் எவ்வித கழிவு பொருட்களும் கொட்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bathroom ,south , Kulithalai, Karur, Mayanur
× RELATED கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில்...