வரும் 28ம் தேதி காவிரி ஆணையம் கூடுகிறது... ஜூன் மாதம் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுமா?

கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் தங்களது குடிநீர் தேவைக்கு சரியாக இருப்பதாக கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து கால தாமதம் செய்து வரும் நிலையில், காவிரி விவகாரத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவில் கேரளா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 9 பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் டெல்லியில் 23ம் தேதி நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசு பொதுப்பணித் துறை திருச்சி பிரிவு தலைமை பொறி யா ளர் செல்வராஜ் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்ரமணி ஆகியோர் தலைமையில் தமிழக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதே போல் கேரளா-கர்நாடகா-புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுத்தலைவர் நவீன்குமாரிடம் தமிழக அதிகாரிகள் தமிழகத்திற்கு ஜுன் 1ம் தேதி முதல் 9.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க வலியுறுத் தியுள்ளனர்.

இந்நிலையில் காவிரி ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இக் கூட் டத்திலும் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொண்டு அதே கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கர்நாடகா உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதே காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறுகையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசானது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது. கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டிய மாதாந்திர தண்ணீரை பெறவும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை வைகை-குண்டாறு நதிகளையும் இணை க்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திருச்சி, திருவள்ளூர், காஞ்சி புரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலுார், தஞ்சை, புதுக்கோ ட்டை, சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் பயன் பெறும் என்றனர்.

குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, தமாகா விவசாய அணி சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை கர்நாட கா வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ஜுன் 1ந்தேதி முதல் 9.2 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும். கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் வழங்க மறுத்தால் கர்நாடகாவில் உள்ள கே.ஆர். எஸ், ஹேரங்கி, கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளையும் காவிரி ஆணையம் தன் வசப்படுத்த வேண்டும். மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை போன்று, காவிரி ஆணையமும், தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட அளிக்க வேண்டும். ஜுன் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடகா உரிய நேரத்தில் வழங்காததால் குறுவை சாகுபடியே நடை பெற வில்லை. இந் தாண்டு அதே நிலை தொடராமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கை எடு்கக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த மாதத்திற்கு எத்தனை டிஎம்சி தண்ணீர்?

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜுன் மாதம் 9.19 டிஎம்சி, ஜுலை 31.24 எடிம்சி, ஆகஸ்டு 45.95 டிஎம்சி, செப்டம்பர் 36.76 டிஎம்சி, அக்டோபர் 20.22 டிஎம்சி, நவம்பர் 7.35 டிஎம்சி, ஜனவரி 2.76 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டிஎம்சி என மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும்.ஆனால் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் தங்களது தேவை க்கு சரியாக இருப்பதாக கூறி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் கர்நாடகா அரசு தொடரந்து தாமதம் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: