×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சாதுர்யமானவர்: டொனால்டு டிரம்ப்

டோக்கியோ: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சாதுர்யமானவர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அந்நாட்டுடன் மோதல் போக்கை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கைவிட்டார். அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளையும் கைவிட்ட கிம் ஜாங் உன், மென்மையான போக்கை கடைபிடித்தது உலக நாடுகள் மத்தியில் வடகொரியா மீதான கண்ணோட்டம் மாறியது. இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாமில் மீண்டும்  இரு தலைவர்களும்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பு உறவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும், ஏவுகணையை சோதனையை வடகொரியா துவங்கியிருக்கிறது. இந்நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிகவும் சாதுர்யமானவர் என்றும் தனது நாட்டை மேம்படுத்த, அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதை அவர் அறிந்திருப்பார் எனவும் கூறினார்.

Tags : Kim Jong ,North Korean ,Donald Trump , North Korea, Kim Jong Mae, Donald Trump
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை