×

புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ல் தொடக்கம்

புதுடெல்லி:  புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தொடர்ந்து 2 வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வரும் 30ம் தேதி பொறுப்பேற்கிறார்.இதையடுத்து மறுநாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மக்களவையின் முதல் கூட்டத்தொடரை எப்போது நடத்துவது என்பது இறுதிசெய்யப்படும்.இந்த நிலையில் 17 வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 6ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 6 அமர்வுகளாக நடைபெறும், இந்த கூட்டத்தொடர் ஜூன் 15ம் தேதி நிறைவடைகிறது.




Tags : session ,Lok Sabha , New. Lok Sabha. starts .June 6
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...