×

தேனியில் மாரத்தான் ஓட்டம் 12.5 கி.மீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல்

தேனி: தேனியில் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் நேற்று காலை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது. 352 இளைஞர்கள் பங்கேற்ற இதில் அவர்களை ஊக்கப்படுத்த சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல்லை சேர்ந்த  கர்னல் வீரமணி (56)யும் கலந்துகொண்டு 12.5 கி.மீட்டர் தூரத்தை 54 நிமிடத்தில் கடந்தார். இதுகுறித்து கர்னல் வீரமணி கூறுகையில், ‘‘நான் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியில் சேர்ந்தேன். கார்கில் போரிலும் பங்கேற்றேன். மற்றவர்களுக்கு சொல்லும் ஆலோசனையை முதலில் நீ கடைபிடித்து வாழ் என்ற அடிப்படை  தத்துவத்தின்படி இளைஞர்களுடன் ஓடினேன்’’ என்றார்.


Tags : The marathon,honey, In 54 minutes, kernel
× RELATED மணல் விற்பனை: தமிழ்நாடு அரசு நிலை...