மழைநீர் சேமிக்க கட்டமைப்பு இல்லையேல் கடும் நடவடிக்கை: பிரகாஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர்

மழைநீர் கட்டமைப்பு மிக முக்கியம். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். பொதுமக்கள் இதை கடைபிடிக்க வேண்டும்; முழுமையாக மழைநீர் சேகரிப்பு இருந்தால் தான் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் நாங்கள்  வலியுறுத்தி வருகிறோம்.  இனிமேல் கட்டப்படும் வீடுகளுக்கு மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் தான் பணி நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும். இப்போது இந்த விதிகளை முழுமையாக கடைபிடித்து வருகிறோம். எந்த காரணத்தை  கொண்டும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. எதிர்காலத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நூறு சதவீதம் முழுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பழைய வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளது. இதில், எந்த வீடுகளில் மழை நீர் சேகரிப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது, எந்த வீட்டில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்று நாங்கள் ஒரு ஆய்வு  நடத்தவிருக்கிறோம். எல்லா வீடுகளையும் ஆய்வு செய்து, எந்த வீட்டில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதோ அதை நாங்கள் பட்டியல் எடுத்து ஆவணப்படுத்தவிருக்கிறோம். அதே நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி, அந்த கட்டமைப்பை அமைக்க வலியுறுத்துவோம். இதில் தயவு தாட்சண்யம் காட்டப்பட மாட்டாது.  இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் இதற்கான  வேலைகளில் இறங்கவிருக்கிறோம். தற்போது பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கு நேரில் ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என்று பார்க்கிறோம். அவ்வாறு அமைக்கப்படாத வீடுகளுக்கு பணி  நிறைவு சான்றிதழ் தரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பழைய வீடுகளுக்கு மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை வைக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. அந்த அரசாணையை பின்பற்றி மக்களின் ஒருங்கிணைப்பின் பேரில் தான் இது போன்ற கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். நாங்கள் இதை  சிறப்பு கவனம் எடுத்து பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, இது தொடர்பாக, நான் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எந்த அளவுக்கு இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கட்டாயம் செய்வோம்.  நாங்கள் எங்களுடைய எல்லா செயல்பாட்டிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியத்தை வலியுறுத்தி தான் வருகிறோம். தற்போது மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு முகாம்  நடத்த இருக்கிறோம். மேலும், இது தொடர்பாக மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் பிரபலமானவர்களை  வைத்து குறும்படம் எடுக்கவிருக்கிறோம்.  இப்போது குப்பைகளை தரம் பிரித்து ெகாடுப்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.  மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளோம். இது தொடர்பாக திட்டமிட்டுள்ளோம். விரைவில் ஆரம்பிப்போம். பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றின் மூலம் நாங்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அப்போது தான் இளைஞர்களை எளிதாக எங்களால் ஈர்க்க முடியும்.

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. இந்த காலகட்டத்திற்கு முன்னதாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தால் மட்டுமே மழை நீரை முழுவதுமாக  சேமித்து வைக்க முடியும். எனவே, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது தொடர்பாக நாங்கள் விரைவில் எங்களது ஆய்வு பணியை ெதாடங்குவோம். வீடுகளுக்கு நேரில் ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என்று பார்க்கிறோம். அவ்வாறு அமைக்கப்படாத வீடுகளுக்கு பணி நிறைவு சான்றிதழ் தரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: