×

தண்ணீரை சேமிக்காததால் ஆட்டிப்படைக்கும் வறட்சி அரசு மட்டுமல்ல, மக்களும் குற்றவாளிகளே!: விழிப்புணர்வு இனியாவது வருமா?

* தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் நிலத்தடி நீர் பலமடங்கு அதலபாதாளத்துக்கு சென்று விட்டது; சென்னையில் 1.3 சதவீதம் அளவுக்கு தான் நிலத்தடியில் தண்ணீ–்ர் உள்ளது.
* மெட்ரோவாட்டர் மூலம் மக்களுக்கு 850 மில்லியன் லிட்டர் வரை சப்ளை செய்த காலம் ேபாய்,  இப்போது 200  மில்லியன் லிட்டருக்கே திண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது lராட்சத குழாய் போட்டு ஆங்காங்கு தண்ணீரை எடுத்து  விடுவதால் நிலத்தடியில் இனி புகப்போவது கடல் உப்பு நீர் தான். lதிரும்பிய இடமெல்லாம் வானளாவிய பல மாடி கட்டிடங்கள்; நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள். ஆறு, குளங்களை இணைக்கும் மழைநீர் கால்வாய்கள் மாயம்; மழைநீரில் 35  சதவீதம் ஆவியாகி, 14 சதவீதம் பூமியால் ஈர்க்கப்படுகிறது; மீதமுள்ள 10 சதவீத தண்ணீரை மழைநீர் கால்வாய் மூலம் சேமிக்க வழியில்லாமல் வெறும் 5 சதவீதம் தான் நிலத்தில் ஈரத்தன்மைக்கு உதவுகிறது. lகுடங்களை கட்டிக்கொண்டு  தெருத்தெருவாய், பல கிலோமீட்டர் தூரம் அலையும் கொடுமை இப்போது பல மாவட்டங்களில் அரங்கேறி கொண்டிருக்கிறது.
* சென்னையில் இரண்டு நாளுக்கு ஒரு முறை வரும்  தண்ணீர் லாரிக்காக தவம் கிடக்கும் ஆயிரக்கணக்கான குடங்களின் அணிவகுப்பு; வந்தவுடன் நடக்கும் அடிதடிகள்.
* தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் பணக்காரர்கள் கூட  தெருத்தெருவாய் அலைந்த கொடுமை,; சென்னைக்கு நேரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதையே இந்த அடிதடி காட்டுகிறது. பாலைவனமாகப் போகிறது நமது பசுமை மாநிலம்.
விழிப்போமா இனியாவது? இனியொரு விதி செய்வோம்; மழைநீரை சேமிப்போம் என சபதம் கொள்வோம். மழைநீரை சேமிக்க முழுமையாக செயல்படாத அரசு குற்றவாளி என்றால், பணத்தை சேமிக்கும் மக்களுக்கு தண்ணீரை சேமிக்க  வேண்டும் என்று விழிப்புணர்வு இல்லாததும் குற்றம் தானே. அதனால் மக்களும் குற்றவாளிகள் தானே. இனியாவது விழிக்குமா தமிழகம்? இதோ நான்கு பேர் அலசல்:



Tags : drought government , Drought tolerance , save water,people
× RELATED சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை...