×

பதிவுத்துறையில் நிரந்தர ஐஜி நியமனம் எப்போது?: ஊழியர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: பதிவுத்துறையில் நிரந்தர ஐஜி நியமனம் செய்வது எப்போது என்று ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். பத்திரப்பதிவுத்துறையில் ஐஜியாக இருந்த குமரகுருபரன் கடந்த பிப்ரவரியில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வணிகவரித்துறை செயலாளர் பாலச்சந்திரன் பதிவுத்துறை ஐஜி பொறுப்ைப கூடுதலாக ஏற்றுக்கொண்டார்.  அவர், வணிகவரித்துறை செயலாளர் என்பதால், அந்த துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இதனால், சார்பதிவாளர்கள் பதிவுப்பணிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அவரிடம் தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக, தற்போது ஆன்லைனில் வில்லங்கசான்று பெற விண்ணப்பிக்கும் போது, அதில் பல கிராமங்கள் பெயர் விடுபட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பதிவுத்துறை ஐஜியின்  கவனத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் அவர் பிரச்சனையை தீர்வு காண நடவடிக்கை எடுப்பார். ஆனால், தற்போது பதிவுத்துறை ஐஜி அணுக முடியாத நிலையில் இது போன்ற பல பிரச்சனைகள் தீர்வுக்கிடைக்காததால் பதிவுப்பணிகளில்  சிக்கல் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக வணிகவரித்துறை செயலாளரும் பதிவுப்பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வணிகவரித்துறை செயலாளர் விடுப்பில் உள்ளார்.  அவருக்கு பதிலாக ெதாழிற்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூடுதல் பொறுப்பு என்பதால் பதிவுத்துறையில் சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியல், ஆன்லைன் பத்திரபதிவில் உள்ள சிக்கல்களை தீர்க்க  முடியாத நிலை தான் உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வரவுள்ள நிலையில் பதிவுத்துறைக்கு நிரந்தர ஐஜியை நியமிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஊழியர்கள் கூறும் போது, ஆன்லைன் பத்திரப்பதிவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை வரும். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு தெரியப்படுத்தப்படும்.  ஆனால், தற்போது நிரந்தர ஐஜி இல்லாமல் உடனடியாக எங்களது பிரச்னைகளை தெரியப்படுத்த முடியவில்லை. தற்போது ஆன்லைனில் உள்ள பிரச்சனை சரி செய்யப்படாவிட்டாலும் சரி செய்துவிட்டோம் என்று தனியார் நிறுவனம் கூறுகிறது. இது தொடர்பாக நாங்கள் யாரிடம் சென்று மேல்முறையீடு செய்வது என்று தெரியவில்லை. இதனால், பதிவுப்பணிகள் கடந்த 2 மாதங்களாக மந்தமாகவே உள்ளது. இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு நிரந்தர ஐஜி நியமிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றனர்.




Tags : IG , permanent ,IG , registry
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...