×

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 6 லட்சம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில்  தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வு இடையில் சில ஆண்டுகள் நடக்காமல் விடுபட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு பிறகு மார்ச் 15ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  என்றும் தெரிவித்து இருந்தது.
அதன்படி தகுதித் தேர்வு முதல்தாள் எழுத 1 லட்சத்து 73 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் என மொத்தம் 6 லட்சத்து 4  ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் தகுதியான  விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அதற்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ேதர்வு எழுத விண்ணப்பித்துள்ள நபர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் சென்று தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9ம் தேதிகளில் காலை 10 மணிக்கு  தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும்.Tags : Teacher Eligibility Test , Holder Ticket ,eacher, Eligibility, Test
× RELATED ஆசிரியர் தகுதி தேர்வு: பார்வையற்ற...