நகரின் முக்கிய பகுதிகளில் விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தி இருந்த 2400 வாகனம் பறிமுதல்: விரைவில் ஏலம் விடப்படும்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த 2400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைகள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் வாகனங்களை நீண்ட நாட்கள் நிறுத்தி வைப்பது. பயன்படுத்தாமல் நிறத்தி வைத்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று நோட்டீஸ் வாகன உரிமையாளர்களுக்கு  மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. இதன்பிறகும் அப்புறபடுத்தாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,875 வாகனங்கள்  காவல்துறை உதவியுடன் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ₹2.13 கோடி  வருமானம் கிடைத்தது. இதில் ₹1.60 கோடி தொகை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமிரா அமைப்பதற்காக சென்னை மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. காவல் துறை உதவியுடன் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்பட்டு சம்பந்தபட்ட  பகுதிக்கு உட்பட்ட வட்டாரங்களில் உள்ள பகுதிகளில் வைக்கப்படுகின்றன.அதன்படி தற்போது வரை 2480 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2400 வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில் இந்த வாகனங்களை ஏலம் விடும் பணி விரைவில் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: