முடங்கி கிடக்கும் முகிலன் வழக்கு மாயமாகி 100 நாட்கள் ஆகியும் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

சென்னை: சுற்று சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி நேற்றுடன் நூறு நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் முகிலன் நட்புவட்டாரங்களில் தங்கள்  விசாரணையை தொடங்கி உள்ளனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன்(52). இவர் தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு ெபற்றவர். தற்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக  பதவி வகித்து வருகிறார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று உரிய  ஆவணங்களுடன் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் ஆவண படம் ஒன்று வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு குறித்து ஆவணம் படம் வெளியிட்ட மறுநாளே அதாவது கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென  மாயமானார். சம்பவத்தன்று முகிலன் பச்சை கலர் முழுக்கை சட்டை, வெள்ளை நிற பேன்டும் அணிந்து இருந்தார்.ஸ்டெர்லைட் ஆலைகள் சம்பந்தப்பட்ட யாரேனும் முகிலனை கடத்தி இருக்க கூடும் என்று கடந்த 17ம்தேதி எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி  புகார் ஒன்று அளித்தார். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும்  காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் செங்கல்பட்டு வரை சிக்னல் இருந்துள்ளது. அதன் பிறகு செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஆனாலும் முகிலனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தொடர் நெருக்கடியால் இந்த வழக்கு பிப்ரவரி 26ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மாநிலம் முழுவதும் முகிலன்  புகைப்படத்துடன் சுவரொட்டி  மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். முகிலன் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் முகிலனை கண்டுபிடிக்க முடியவில்லை. எழும்பூர் ரயில்  நிலையத்திற்கு வந்த அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்று வரை மர்மமாகவே உள்ளது. முகிலன் மாயமாகி நேற்றுடன் நூறு நாள் முடிந்துள்ளது. ஆனாலும் வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தற்போது முகிலனுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்களை  வைத்து விசாரணை தொடங்கி உள்ளது. மேலும், முகிலன் சார்ந்த அமைப்புகளிடமும் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Stories: