மக்களவை தேர்தலுக்காக விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வந்தது: இன்று முதல் அரசு திட்டங்களை தொடங்கலாம்

சென்னை: மக்களவை தேர்தலுக்காக விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறை அமல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அரசு திட்டங்கள், பணிகளை தொடங்கலாம்.நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் 2ம் கட்டமாக 39  தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான சட்டப்ேபரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி அறிவிக்கப்பட்டது.இதில் வேலூர் தவிர 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக இருந்த 4 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடைசி  கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தவிர 13 வாக்குசாவடிக்கான மறு தேர்தலும் மே 19ம் தேதி நடந்தது. இந்த 7 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட அன்று  முதல்ம் தேதி வரை தேர்தல் நடத்தை அமலில் இருக்கும் என்று இந்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல் நேற்று(26ம் தேதி) முதல் இந்தியா முழுவதும் முடிவுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால் புதிய திட்டங்களை  அறிவிக்கவோ, புதிய பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரவோ இயலாத நிலை ஏற்பட்டது. மேலும் புதிய பணிகளை தொடங்கி வைக்கவும் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல் முடிவடைந்ததால் இன்று  முதல் அரசு பணிகளை மேற்கொள்ளலாம். புதிய திட்டங்கள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கான ஒப்பந்த புள்ளிகளை கோரும் பணிகள் தொடங்கலாம்.நீண்ட நாட்களுக்கு பிறகு அமல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இன்று தலைமை செயலகத்திற்கு வந்து தங்கள் பணிகளை தொடங்க உள்ளனர். அமைச்சர்கள்  இல்லாததால் தலைமை செயலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை விரைவாக குறைந்து காணப்பட்டது. அமல் விலக்கி கொள்ளப்பட்டதால் தலைமை செயலகத்திற்கு வருவோரின் எண்ணி–்ககை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories: