×

ஆபரேஷன் தாமரை ஆரம்பமாகி விட்டதா? காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் பாஜ தலைவருடன் திடீர் சந்திப்பு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான  எஸ்.எம்.கிருஷ்ணாவை காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் திடீரென சந்தித்து பேசியது கர்நாடக  அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா  செய்துவிட்டு பாஜ.வில் சேர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.   இதை உறுதி செய்யும் வகையில், முன்னாள் முதல்வரும், பாஜ மூ்த்த தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணாவை  ரமேஷ் ஜாரகிஹோளி நேற்று  முன்தினம் சந்தித்து பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜ மாநில  தலைவர் எடியூரப்பா கூறுகையில், ‘‘யாரும் யாரை வேண்டுமானாலும்  சந்திக்கலாம். இது அவர்களின் அரசியல் எதிர்காலம். அவர்கள்  ஏன் சந்தித்தார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு  இல்லை.

ஆபரேஷன் தாமரை திட்டத்தின் மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க வேண்டிய அவசியம் பாஜ.வுக்கு கிடையாது. ஆனால், பாஜ.வில்  சேரலாம் என்று யார் யார் வருகிறார்களோ அவர்களை நாங்கள் தடுக்க முடியாது,’’  என்றார். முன்னாள் துணை முதல்வர் அசோக் கூறுகையில், ‘‘காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜாரகிஹோளி, சுதாகர் இருவரும் எஸ்.எம். கிருஷ்ணா  காங்கிரசில் இருக்கும் போதே நெருக்கமானவர்கள். இதனால், அடிக்கடி அவரது  வீட்டுக்கு வந்து செல்வார்கள். இதற்கும் அவர்கள் பாஜ.வில் இணைகிறார்கள்  என்பதற்கும் சம்பந்தமில்லை,’’ என்றார். காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜாரகிஹோளி  கூறுகையில், ‘‘எஸ்.எம்.கிருஷ்ணா அரசியலில் மூத்த தலைவர். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை,’’ என்றார். மற்றொரு எம்எல்ஏ சுதாகர் கூறுகையில், ‘‘அவர் எங்களுக்கு எல்லாம் முன்மாதிரியான தலைவர். அதனால் சந்தித்து பேசினேன்,’’ என்றார். இதற்கிடையே,  காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசியது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தினர். அதில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடிவு  செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாவப்போகும் 6 பேர் யார்?

அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களான ரமேஷ்  ஜார்கிஹோளி, டாக்டர் சுதாகர், பி.சி.பாட்டீல், மந்த் பாலசாஹிப் பாட்டீல்,  கணேஷ் மற்றும் மகேஷ் குமட்டள்ளி ஆகிய 6 பேர் ஆபரேஷன் தாமரை திட்டத்தின்  கீழ் பதவிகளை ராஜினாமா ெசய்து விட்டு பாஜவில் இணைய உள்ளனர் என்ற ெ்சய்தி  பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Tags : Operation Lotus ,Congress ,BJP ,meeting , Operation, Lotus, Congress, dissatisfaction MLA, meeting
× RELATED கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம்...