×

ஒற்றை யானை தாக்கியதில் 2 பேர் பலி நவமலையில் வன அதிகாரிகளை முற்றுகையிட்ட மலை வாழ்மக்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் யானை தாக்கி இருவர் இறந்த சம்பவத்தால் ஆய்வுக்கு சென்ற  அதிகாரிகளை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் இரண்டு  நாட்களுக்கு முன்பு முருகன் என்பவரது மகள்  ரஞ்சனி(7), காட்டு  பகுதியில் உறவினர்களுடன் நடந்து செல்லும்போது, காட்டு யானை தாக்கி  உயிரிழந்தாள். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, நவமலையில் உள்ள தனது  குடிசை வீட்டின் வெளியே படுத்திருந்த மாகாளி(55) என்பவரை காட்டுயானை தலையில் மிதித்து  கொன்றது. இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இருவரை காட்டு யானை கொன்ற சம்பவம்,  மலைவாழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று,  மாகாளி இறந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள, ஆனைமலை புலிகள்  காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் சம்பவ  இடத்துக்கு சென்றனர். அப்போது அதிகாரிகளை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலைவாழ் மக்கள்  கூறுகையில், ‘‘நவமலை குடியிருப்பு பகுதியில் இரண்டு  பேரை யானை தாக்கி கொன்றது எங்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை மேலும், தொடராமல் இருக்க, இப்பகுதியில்  நடமாடும் காட்டு யானையை விரட்டி அடிக்க வேண்டும்’’ என்றனர். அப்போது துணை இயக்குனர் மாரியப்பன், `டாப்சிலிப்பிலிருந்து  இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, நவமலையில் சுற்றித்திரியும் காட்டு  யானையை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதன்பின் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமம் அருகே வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை யானை மிதித்து கொன்றது. இதுபற்றியும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : mountain elephants ,forest officials , Single elephant 2 dead, November, hill life
× RELATED திருப்பதியில் ஜனவரி 1ம் தேதி வரை...