மெல்போர்ன்: பிரபல தொழில் அதிபர் அதானியின் கார்மிச்சைல் நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியை அனுமதிப்பது குறித்த இறுதி முடிவு, மூன்று வாரத்தில் எடுக்கப்படும் என்று அந்த நாட்டில் உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்ததும் சில வாரங்களில் பணியை துவக்கிவிடுவோம் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நீடிப்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டம் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் மத்தியில் உள்ள காலிலீ படுகை பகுதியில் கார்மிச்சைல் நிலக்கரி சுரங்கத்தை கடந்த 2010ல் அதானி குழுமம் வாங்கியது.