×

விவசாயம் செழிக்க வேண்டி வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன

வத்திராயிருப்பு: மழை, விவசாயம் செழிக்க வேண்டி வத்திராயிருப்பில் இன்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மழை, விவசாயம் செழிக்க வேண்டி இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8.30 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டை சிவகாசி ஆர்டிஓ தினகரன் துவக்கி வைத்தார். வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதன்பின் மதுரை, திருச்சி, வத்திராயிருப்பு, சேதுநாராயணபுரம், கூமாப்பட்டி, கான்சாபுரம் போன்ற ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் 150 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி சென்றன. காளைகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். பிடிபடாத காளைகள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயம், அண்டா, மிக்ஸி போன்றவைகள் பரிசாக வழங்கப்பட்டன. திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவசக்தி, கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.


Tags : Agriculture, Jallikadu, Bulls
× RELATED செங்கல் சூளையில் சிறைவைக்கப்பட்டுள்ள...