கடலில் பலத்த காற்று வேதாரண்யத்தில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: கடலில் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் சுமார் 5,000 பேர் இன்று கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இன்று காற்று பலமாக வீசுகிறது. அதேபோல் கடலின் உற்பகுதியில் சூறைக்காற்று வீசுகிறது. வழக்கமாக கடலில் இருந்து அலைகள் நேராக கரைக்கு வரும். இந்த காற்று காரணமாக இன்று நேராகவும், சைடாகவும் மாறி மாறி அலைகள் வருகிறது.

இதன்காரணமாக படகுகளை மீனவர்களால் இயக்க முடியவில்லை. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த சுமார் 5,000 பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால், விசைப்படகு மீனவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக கடலுக்கு செல்லாமல் ஓய்வில் உள்ளனர். இதனால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மீன்களின் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று பைபர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாளையும் செல்வார்களா என தெரியவில்லை. இதனால் இந்த பகுதியில் மீன்களின் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்று மீனவர்கள் கூறினர்.

Tags : fishermen ,sea , Strong wind, veteranism, fishermen, sea
× RELATED கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி...