×

சொத்து மதிப்பு ரூ.1,107 கோடி டெபாசிட் கூட கிடைக்கல!: பீகார் சுயேச்சை வேட்பாளர் பரிதாபம்

பாடலிபுத்திரா: மக்களவை தேர்தலில் களமிறங்கிய பல கோடீஸ்வரர் வேட்பாளர்களில் அதிக பணக்காரரான பாடலிபுத்திரா மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் குமார் சர்மா தோல்வியை தழுவியுள்ளனர். பீகார் மாநிலம் பாடலிபுத்திரா மக்களவை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ரமேஷ் குமார் சர்மா என்பவர் வெறும் 1,556 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். அவரது சொத்து மதிப்பு ரூபாய் 1,107 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பாளர்களின் சொத்து  விவரங்களைக் கணக்கிட்டபோது அதில் ரமேஷ் குமார் ஷர்மா என்பவர்தான் பெரும்  பணக்காரராக இருந்தார். அதனால், தேர்தலில் அவர் தோல்வியுற்றது முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த தேர்தலில் நாட்டின் பணக்கார வேட்பாளர்களில் முதல் 10 இடங்களில் இருந்த மத்திய பிரதேச மாநிலம் காங்கிரசைச் சேர்ந்த நகுல்நாத், தமிழ்நாட்டைச் சேர்ந்த எச்.வசந்தகுமார், கர்நாடகாவைச் சேர்ந்த டி.கே.சுரேஷ், ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த கனுமுரு ரகுராம கிருஷ்ணராஜா மற்றும் ஜெய தேவா கல்லா ஆகிய ஐந்து பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

Tags : candidate ,Bihar Independent , Property value, deposit, Bihar independence candidate, pity
× RELATED மாமல்லபுரத்தில் கிருமிநாசினி அதிக...