தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் தொங்குபாலம், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களையும் பார்த்து ரசித்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் ஏற்காட்டில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.  பள்ளி விடுமுறை முடியவுள்ள நிலையில் குழந்தைகளுடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் படுக்கைகளை கண்டு ரசித்தனர். ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் குகை கோவில், பகோடா பாயின்ட், மான்பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் படகுசவாரி செய்தனர்.

ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொடிவேரி அணையில், விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகளின் குவிந்தனர். அருவி போல் கொட்டும் கொடிவேரி அணை நீரில், நீராடி வெப்பத்தை தணிக்கும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்தும், வறுத்த மீன்களை சுட சுட சுவைத்தும் மகிழ்ந்தனர். குழந்தைகளை மகிழ்விக்க அங்கு பூங்கா வசதியும் செய்யப்பட்டுள்ளதால், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணை முக்கிய சுற்றுலா தலமாக மாறிவருகிறது.


× RELATED தர்மபுரி மாவட்டத்தில்...