×

நைஜீரியாவில் ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்... 25 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டு வருகிறது. இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து எல்லைப்பகுதி வழியாக வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : military base ,terrorists ,Nigeria Pago Haram ,soldiers , Nigeria, Pogo Harram terrorist organization, 25 soldiers, death
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...