ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோர் படகு ஒன்றில் லட்சத்தீவுகள் நோக்கிச் செல்வதாக இலங்கை உளவுத்துறை தகவல்

டெல்லி: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோர் படகு ஒன்றில் லட்சத்தீவுகள் நோக்கிச் செல்வதாக இலங்கை அளித்த தகவலை அடுத்து கேரளாவில் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் வெள்ளைப் படகில், லட்சத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கடந்த 23ஆம் தேதி அன்று இலங்கை உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

இதையடுத்து, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க, கேரளத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 72 காவல் நிலைய போலீசாரும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோரக் காவல் படையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடலில் சந்தேகத்திற்குரிய படகுகளைக் கண்டால் தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கும் விடுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: